தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் முன்னேற்றம்

டெல்லி: ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக விமானப் போக்குவரத்ததுறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

DGCA
DGCA

By

Published : Sep 16, 2020, 5:08 PM IST

நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறித்த விவரங்களை விமானப் போக்குவரத்ததுறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆறு விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.

அதேவேளை, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும் போது உள்நாட்டு விமானப் போக்குவரத்து 76 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது. கரோனா லாக்டவுன் கராணமாக விமான போக்குவரத்து சேவை மார்ச் மாத இறுதியில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், உள்நாட்டு சேவையானது மே 25ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது.

செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து விமான இயக்கத்திற்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாத காலத்தில் அதிக பயணிகள் பயணம் செய்த விமான நிறுவனங்களை பொறுத்தவரையில் ஸ்பைஸ் ஜெட் முதலிடத்திலும், விஸ்தாரா இரண்டாமிடத்திலும், கோ ஏர் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதையும் படிங்க:நடப்பாண்டில் மொத்த வரி வருவாய் 22.5% சரிவு

ABOUT THE AUTHOR

...view details