கிங் பிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் சுமார் ஒன்பதாயிரம் கோடிக்கும் மேல் கடன் பெற்று அதை திரும்பச் செலுத்தாமல் லன்டனுக்குத் தப்பியோடினார். அவரை இந்தியா கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் விசாரணை அமைப்புகள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றன.
லண்டன் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு எதிராக மல்லையா மேற்கொண்ட மேல்முறையீட்டையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.