தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற உத்தரவு ஜூன் 1, 2021 வரை நீட்டிப்பு! - தங்க நகை வாங்குவது எப்படி

தங்க நகைக்கான ஹால்மார்க் முத்திரை 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி வரை கட்டாயம் என்ற உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா தாக்கத்தின் காரணமாக அதனை ஜூன் 1, 2020 வரை நான்கு மாதங்கள் கூடுதலாக நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

ஹால்மார்க் முத்திரை
ஹால்மார்க் முத்திரை

By

Published : Jul 27, 2020, 7:27 PM IST

Updated : Jul 27, 2020, 8:49 PM IST

டெல்லி:கரோனா தாக்கத்தின் காரணமாக ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற உத்தரவை ஜூன் 1, 2021 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல் எந்த நகைக்கடையிலும் ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளை விற்பனை செய்யமுடியாது என்ற வகையில், மத்திய அரசாங்கம் ஒரு புதிய உத்தரவை முன்னதாக பிறப்பித்திருந்தது. அதற்குள் அனைத்து நகைக்கடைகளும் இந்திய தரநிர்ணய அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வரும் காலங்களில் வெள்ளியின் விலை புதிய உச்சத்தைத் தொடும் - காரணம் என்ன?

தற்போது 10 கிரேடுகளில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உத்தரவு அமலுக்கு வந்தபிறகு, அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 14 காரட், 18 காரட், 22 காரட் ஆகிய 3 கிரேடுகளில் மட்டுமே தங்கம் விற்பனை செய்யமுடியும்.

அவ்வாறு விற்பனை செய்யும் ஒவ்வொரு நகையிலும், இந்திய தரநிர்ணய அலுவலக முத்திரை, எத்தனை காரட், பரிசோதனை மையம், நகைக்கடையின் அடையாள முத்திரை ஆகியவை பதிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

இவ்வாறு ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படாத நகைகளை விற்கும் நகைக்கடைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அல்லது நகையின் மதிப்பில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும். அதோடு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இனி வாங்கும் தங்கம் சுத்தமான தங்கமாக இருக்குமா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு இருக்காது. நம்பிக்கையுடன் வாங்குவார்கள்.

தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா லாக்கரிலிருந்து கட்டுக்கட்டாகப் பணம், ஒரு கிலோ தங்கம் பறிமுதல்!

நகைக்கடைகளும் அடுத்த ஆண்டுவரை காத்திருக்காமல் உடனடியாக பதிவு செய்து இப்போது ஹால்மார்க் முத்திரை பதிக்கும் கடைகள்போல, அனைத்து கடைகளிலுமே பதிவு செய்யவேண்டும். ஏனெனில், அடுத்த ஆண்டு வாங்கினால் தங்கத்தின் தரம் உயர்ந்ததாக இருக்கும் என்ற உணர்வில், பொதுமக்களும் இப்போது தங்கம் வாங்காமல் தள்ளிப்போட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.

இப்போதே பதிவு செய்துவிட்டால் உடனடியாக வியாபாரம் சூடுபிடித்துவிடும்.

Last Updated : Jul 27, 2020, 8:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details