தமிழ்நாடு

tamil nadu

டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்திரி நீக்கம் செல்லாது!

By

Published : Dec 18, 2019, 4:42 PM IST

டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது செல்லாது என தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

cyrus-mistry-restored-as-tata-sons-chairman-by-tribunal-after-3-years
cyrus-mistry-restored-as-tata-sons-chairman-by-tribunal-after-3-years

டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி 2016ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். இதையடுத்து சைரஸ் மிஸ்திரிக்கும், டாடா குழுமத்திற்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்தது. பின்னர் தனது பதவி நீக்கத்தை எதிர்த்து சைரஸ் மிஸ்திரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், டாடா குழும செயல்பாடுகளில் ரத்தன் டாடா உள்ளிட்டோரின் செயல்பாடுகள் அதிகம் இருந்ததாகவும் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றது. அந்த விசாரணையில் டாடா நிறுவனம் சார்பாக, டாடா குழுமத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் நம்பகத்தன்மையை சைரஸ் மிஸ்திரி இழந்ததால், அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டதாக வாதிட்டது. இதையடுத்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது சரியே என தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் சைரஸ் மிஸ்திரி முறையீடு செய்தார். இந்த வழக்கில் டாடா குழுமத் தலைவராக சைரஸ் மிஸ்திரியை மீண்டும் நியமித்தும், டாடா குழுமத் தலைவராக சந்திரசேகர் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details