தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தண்ணீரை விட மலிவான விலையில் கச்சா எண்ணெய் - மலிவான விலையில் கட்சா எண்ணெய்

மும்பை: கொரோனா வைரஸ் தாக்குதலால் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் 15 ரூபாய் முதல் 16 வரை விற்பனை ஆகிவருகிறது. மேலும் இது ஒரு லிட்டர் தண்ணீரின் விலையை விடை குறைந்த விலையில் விற்பனை ஆகிறது.

Crude Oil becomes cheaper than Water
Crude Oil becomes cheaper than Water

By

Published : Mar 10, 2020, 12:01 AM IST

உலகப் பொருளாதாரம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் 12 ஆண்டுகள் கண்டிடாத கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

சில முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்கள், ஒன்பது விழுக்காடு வரை சரிந்துள்ளது. இந்நிலையில் வர்த்தகத்தின் பொது ஒரு பீப்பாய் அதாவது 159 லிட்டர் கச்சா எண்ணெய் 2,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மேலும் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா போர் பதற்றத்திற்குப் பிறகு, தற்போது தான் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

30 சதவிகிதத்துக்கும் கீழ் கச்ச எண்ணெய் பங்குகள் சரிந்ததால், ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் 15 ரூபாய் முதல் 16 வரை விற்பனை ஆகிவருகிறது. இது ஒரு லிட்டர் தண்ணீரின் விலையை விடை குறைந்த விலையில் விற்பனை ஆகி வருகிறது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:மிரட்டும் கொரோனா: தள்ளாடும் உலகப் பொருளாதாரம்

ABOUT THE AUTHOR

...view details