நாட்டின் முன்னணி பொருளாதார கணிப்பு நிறுவனமான கிரிசில் (Credit Rating Information Services of India Limited) இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு 2020-21ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காடு வீழ்ச்சியைச் சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளது.
1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியா சந்திக்கும் மாபெரும் பொருளாதார சரிவு இதுவே என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த மே மாதம் கிரிசில் வெளியிட்டுள்ள கணிப்பில் பொருளாதார வளர்ச்சி ஐந்து விழுக்காடு அளவில்தான் குறையும் எனத் தெரிவித்திருந்தது. இந்த சூழலில், ஜூன் காலாண்டின்போது ஜி.டி.பி. குறியீடு 23.9 விழுக்காடு சரிவைச் சந்தித்தது.