கொரோனா வைரஸின் உலகளாவிய பரவல் (கொவிட்-19) காரணமாக ஒரே நேரத்தில் வழங்கல் மற்றும் தேவை சேவைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தாண்டின் முதல் பாதியில் உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் மேலும் குறைய வாய்ப்புள்ளன.
இந்த மதிப்பீடு இந்தியாவுக்கு ஒரு மோசமான செய்தியாகும். ஏனெனில் ஏற்கெனவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 4.7 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது. சீனாவுக்கான 2020ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி முன்னறிவிப்பு, முந்தைய மதிப்பீடான 5.2 விழுக்காட்டிலிருந்து 4.8 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு 1.5 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, கொவிட்-19இன் தீங்கு அபாயங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளன. இருப்பினும் அடிப்படை வளர்ச்சி கணிப்பு பிப்ரவரி மதிப்பீட்டிலிருந்து 5.3 விழுக்காடு ஆக குறையும்.