தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நெட்ஃபிளிக்ஸ் - குழந்தைகள் பார்க்கும் வீடியோக்களை கட்டுப்படுத்த புதிய வழி - குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என்பதை கட்டுப்படுத்த புதிய வழி

பிரபல ஸ்டிரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸில் குழந்தைகள் பார்க்கும் வீடியோக்களைப் பெற்றோர்கள் கட்டுப்படுத்தும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.

COVID:19-Netflix to let parents take greater control of what kids watch
COVID:19-Netflix to let parents take greater control of what kids watch

By

Published : Apr 10, 2020, 4:20 PM IST

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் தற்போது ஸ்டிரீமிங் தளங்களை நோக்கித் திரும்பியுள்ளனர்.

அதன்படி பிரபல ஸ்டிரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் குழந்தைகள் பார்க்கும் வீடியோக்களைப் பெற்றோர்கள் கட்டுப்படுத்த புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பெரியவர்களுக்கான கணக்குகளை குழந்தைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க, அதை பாஸ்வேர்ட்டைக் கொண்டு லாக் செய்யும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் குழந்தைகள் என்னவெல்லாம் பார்க்கலாம் என்பதை வரையறுக்கும் முழு அதிகாரமும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவொரு வீடியோவையும் குழந்தைகளுக்கான கணக்கில் வராமல் பெற்றோர்களால் ப்ளாக் செய்ய முடியும்.

இது குறித்து நெட்ஃபிளிக்ஸ் குழந்தைகள் தயாரிப்பு மேலாளர் மைக்கேல் பார்சன்ஸ் கூறுகையில் "ஒவ்வொரு குடும்பமும் வித்தியாசமானது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். பெற்றோர்களுக்கு முழு கட்டுப்பாட்டை வழங்குவதே எங்களின் குறிக்கோள், இதன் மூலம் குடும்பத்தில் சிறந்த அனுபவத்தை உருவாக்க முடியும்" என்றார். நெட்ஃபிளிக்ஸ் கணக்கில் Profile and Parental Controls என்ற இடத்திலிருந்து இந்த வசதிகளை பெற்றோர்கள் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:கரோனா: இந்தியாவில் வீடியோக்களின் தரத்தை குறைத்த யூடியூப்!

ABOUT THE AUTHOR

...view details