கரோனா வைரஸ் தாக்குதலால் உலக பொருளாதாரம் மாபெரும் பொருளாதார சரிவைச் சந்தித்து வருகிறது. வர்த்தக உலகம் கடுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில், உலக பங்குசந்தைகள் அனைத்தும் சரிவைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, இந்திய பங்குச்சந்தை. கடந்த வாரம் முழுவதும் கடும் சரிவைச் சந்தித்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்த வாரமும் சரிவைச் சந்திக்க தொடங்கியுள்ளது.
சென்செக்ஸ் 2,700 புள்ளிகளுக்கு மேல் சரிவு...எப்போது மீளும் பங்குச்சந்தை! - சென்செக்ஸ் சரிவு
மும்பை: வாரத்தின் முதல் நாளான இன்று, வர்த்தக முடிவின்போது சென்செக்ஸ் 2,713 புள்ளிகளுக்குச் சரிவை சந்தித்துள்ளது. மேலும் நிஃப்டி 758 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
Stock market Update
இன்றைய வர்த்தக நிலவரப்படி, சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் சரிவடைந்து, 31,390.07 எனவும், நிஃப்டி 758 புள்ளிகள் சரிந்து 9,197.10 எனவும் வர்த்தகமாகியுள்ளது. மேலும் சரிவைச் சந்தித்த பங்குகளில் டாடா ஸ்டீல், வேதாந்தா, ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் இடம்பிடித்துள்ளன.
இதையும் படிங்க: 12%-லிருந்து 18%-க்கு உயரும் மொபைல் ஜிஎஸ்டி! - அதிரடி காட்டும் மத்திய அரசு