தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

காப்பீட்டு நிறுவனங்கள் ப்ரீமியங்களை தவணைகளில் பெற்றுக்கொள்ளலாம்

மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களை காப்பீட்டு நிறுவனங்கள் தவணைகளில் பெற்றுக்கொள்ளலாம் என IRDAI எனப்படும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு

By

Published : Apr 22, 2020, 8:19 PM IST

Updated : Apr 22, 2020, 9:42 PM IST

கரோனாப் பரவல் காரணமாய் நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்த நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவக் காப்பீடுகளுக்கான பிரீமியங்களை காப்பீட்டு நிறுவனங்கள் தவணைகளில் பெற்றுக்கொள்ளலாம் என IRDAIஎனப்படும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர முறையில் ப்ரீமியம் தொகை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தவணை முறையில் ப்ரீமியம் தொகை வசூலிக்கும் முறையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஐஐ) அறிமுகப்படுத்தியது.

கரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நிலமைகளை தற்போது கருத்தில் கொண்டு, இதை எளிமைப்படுத்தும் விதத்தில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் தவணை முறையில் ப்ரீமியம் தொகையை வசூலித்துக் கொள்ளலாம் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தற்போது சுற்றரிக்கை மூலம் அறிவித்துள்ளது.

புதிய பிரீமியம் கட்டண முறையின் கீழ் உள்ள மருத்துவக் காப்பீடுகளை வசூலிக்கும் முறையிலும், ப்ரீமியம் தொகையிலும் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரிலையன்ஸ் பங்குகள் விலை கிடுகிடு உயர்வு - பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவு!

Last Updated : Apr 22, 2020, 9:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details