கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இச்சமயத்தில் இணையத்தில் ஸ்ட்ரீமிங், கல்வி, ஃபிட்னஸ் ஆகியவற்றின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜூம், ஹேங் அவுட்ஸ், கூகிள் டியோ, ஹவுஸ்பார்டி போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களின் பயன்பாடு 71 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஹவுஸ்பார்டியின் பயன்பாடு 215 விழுக்காடும், ஜூம் பயன்பாடு 141.69 விழுக்காடும் அதிகரித்துள்ளன.