கோவிட்19 தொற்று நோய் தீவிரமாக பரவி வருவதால், இந்திய ரிசர்வ் வங்கி, பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதம் இ.எம்.ஐ. வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியது. இது தொடர்பாக வங்கிகள் தற்போது முக்கிய முடிவெடுத்து வருகின்றன.
அதன்படி பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கேட்டுள்ளன. ஹெச்.டி.எப்.சி. உள்ளிட்ட வங்கிகள் ஏற்கனவே வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கேட்டு வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவர்களின் கணக்கிலிருந்து பணத்தை இ.எம்.ஐ. பிடித்தம் செய்கின்றன.
வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத் தேர்வில் வேண்டாம் (நோ) என்று கூறும்போது அவர்களின் பணம் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படாது. இதேபோல் ஆக்ஸிஸ் வங்கியும் தற்போது வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரிலே இ.எம்.ஐ. விவகாரத்தை விட்டுள்ளது.