கோயம்புத்தூர்:மாவட்ட சிறு, குறு தொழில் அமைப்புகளின் சங்க அலுவலகத்தில், அதன் தலைவர் சிவசண்முக குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “மூலப்பொருள்கள் விலை ஏற்றத்தினால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மூலப் பொருள்களின் தட்டுப்பாடு நிலவுகிறது. மூலப்பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தும் வகையில், டிசம்பர் 16ஆம் தேதி முதல் காலவரையின்றி கோவையில் இயங்கிவரும் 400 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம். இதனால் நாள் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படும்.
டிசம்பர் 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்: சிறு குறு தொழில் சங்கம் அறிவிப்பு மேலும், இத்தொழிலைச் சார்ந்துள்ள இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இவற்றை சார்ந்து இயங்கி வரும் அரவை இயந்திரம், மோட்டார் பம்பு தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.