கரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு 21 நாள்களுக்கு வெளியேறக் கூடாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், பல நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கிவந்த சேவையை நிறுத்தியுள்ளன. இணைய சேவை நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் 'மக்கள் ஊரடங்கு' முடியும்வரை அதன் சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து உபர் கேப் சேவை நிறுவனமும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பதி, விஜயவாடா, டெல்லி, சென்னை, சூரத், ராஜ்கோட், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 75 நகரங்களில் அதன் சேவையை 21 நாள்களுக்கு நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.