இந்திய ஜவுளித் தொழிலின் கூட்டமைப்பான சிட்டி (Confederation of Indian Textile Industry) என்ற அமைப்பு, 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில் சிட்டி(CITI ) இன்று கோவையில் அதன் பங்குதாரர்கள் உடன் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளது. கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த சிட்டி தொழில் சங்கத் தலைவரானராஜ்குமார் இந்திய ஜவுளித் தொழிலில் ஏற்பட்ட மந்த நிலை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.