கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டது. இதனால் பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்ததாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில், மும்பை பங்குச் சந்தை 1,028.17 புள்ளிகள் உயர்ந்து 29,468.49 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தை 316.65 புள்ளிகள் உயர்ந்து 8,597.75 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது.
இதனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி ட்வின்ஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் லாபத்தை ஈட்டியுள்ளது. இருப்பினும், இந்துஸ்இந்த் வங்கி, மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் நஷ்டத்தை ஈட்டியுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஏழை, எளிய மக்கள் பல்வேறு விதமான இன்னல்களை சந்தித்துவருகின்றனர்.
குறிப்பாக, தினக்கூலி, வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் உதவித் தொகை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இம்மாதிரியான உதவித் தொகை அளித்தால் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்திக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்