கரோனா வைரஸ் தொற்று பரவலால், உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் மிக மோசமான மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "கடந்த 2009ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைவிட, மோசமான மந்தநிலை தற்போது நிலவிவருகிறது.
மோசமான பொருளாதார மந்தநிலையில் உலகம் - ஐஎம்எஃப் தலைவர் எச்சரிக்கை!
வாஷிங்டன்: கரோனா வைரஸ் பரவலால் உலகப் பொருளாதாரம் மிக மோசமான மந்தநிலையில் உள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா எச்சரித்துள்ளார்.
IMF chief
பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருவதால், உலக பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் சூழலில் ஏழை நாடுகள், வளரும் நாடுகள் அனைத்திற்கும் நிதி அதிக அளவில் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட 80 நாடுகள் இந்தப் பேரிடர் காலத்தில் ஐஎம்எப்யிடம் இருந்து 25 ட்ரில்லியன் டாலர் நிதியை எதிர்பார்க்கின்றனர்" என்று கிறிஸ்டாலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவை எதிர்த்து போராட கரம் கோர்க்கும் ஆசிரியர்கள்