தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 26, 2020, 6:47 PM IST

ETV Bharat / business

மாற்று வழி பிறக்கும் வரை சீனாவிலிருந்து இறக்குமதி!

தகுந்த விலையில் உள்நாட்டில் பொருள்கள் உற்பத்தியாகும் வரை, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது தடை செய்யப்படமாட்டாது என இந்திய ஆட்டோமொபைல் மற்றும் மருந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய சீன உறவு
இந்திய சீன உறவு

டெல்லி: உள்நாட்டில் தேவையானது கிடைக்கும்வரை, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது தடை செய்யப்படமாட்டாது என இந்திய ஆட்டோமொபைல் மற்றும் மருந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சீன ராணுவத்தினர் தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டு வீர மரணமடைந்தனர். இதையடுத்து, நாடு முழுவதிலும் சீன பொருள்கள் மீதான வெறுப்பை மக்கள் வெளிகாட்டி வருகின்றனர். சில நிறுவன அமைப்புகளும் சீன பொருள்களை பயன்படுத்த போவதில்லை எனக் கூறியுள்ளன. இச்சூழலில் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையும், மருந்துத் துறையும் தங்களுக்கு தேவையான முக்கிய மூலப் பொருள்களையும், உதிரி பாகங்களையும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது.

அதாவது 2018-19ஆம் நிதியாண்டில், 17.6 (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 13 லட்சம் கோடி ரூபாய்) பில்லியன் டாலர் அளவுக்கு ஆட்டொமொபைல் துறை உலக நாடுகளிடமிருந்து தங்களுக்கு தேவையான பொருள்களை இறக்குமதி செய்துள்ளது. அதில் 4.75 (கிட்டத்தட்ட 35ஆயிரம் கோடி ரூபாய்) பில்லியன் டாலர் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதற்கான காரணத்தை விளக்கிய மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி.பர்கவா, "இந்தியாவில் இந்த பொருள்கள் தயாரிக்கப்படவில்லை அல்லது இந்தியாவில் தயாரிக்கப்படுவது விரும்பிய தரத்தில் இல்லை. பொருள்களின் விலையை கொண்டு தற்போது சீனாவிலிருந்து இறக்குமதியை நிறுத்துவது என்பது நடக்காத காரியம்" என்று கூறியுள்ளார். மேலும், இறக்குமதிக்கான மாற்று ஆதாரங்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும், இல்லையெனில் நுகர்வோர் பெரும் விலை கொடுத்து பொருள்களை வாங்க இயலும் என்று கூறினார்.

இதேபோன்று மருந்துகள் ஏற்றுமதியில் இந்தியா வளர்ந்து வருகிறது. சன் ஃபார்மா, சிப்லா போன்ற 24 ஆராய்ச்சி மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடத்தில் அரசு சாத்திய கூறுகளை கேட்டறிந்துள்ளது. மருத்துவ துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு நிதியளித்து சலுகைகள் வழங்கியுள்ளது. இந்த 24 நிறுவனங்கள் 80 விழுக்காடு அளவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கின்றனர். மேலும் உள்நாட்டில் 57 விழுக்காடு சந்தை மதிப்பைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details