முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் ரிசர்வ் வங்கி நடவடிக்கை தொடர்பாக தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
அண்மையில் வங்கிப் பத்திரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியானது. அதில், சேமிப்பு பத்திரத் திட்டம் 2018, முற்றிலுமாக இன்றுமுதல் நிறுத்திவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மக்களுக்கு மற்றொரு பேரிடியாக அமைந்துள்ளது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "ஏற்கனவே சிறு சேமிப்பு, ஓய்வூதிய வைப்பு நிதித் திட்டங்களுக்கான வட்டிகளை அரசு குறைத்தது மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு மேலும் பேரிடியாக விழுந்துள்ளது.
சேமிப்பு பத்திரத் திட்டத்தின் மூலம் பல மூத்த குடிமக்களுக்கு 7.75 விழுக்காடு வட்டியுடன் கூடிய சேமிப்பு இத்தனை நாள்கள் கிடைத்தன. இந்த அறிவிப்பால் மக்களுக்கு கிடைத்துவந்த அடிப்படை முதலீட்டுத் திட்டம் பறிபோய்விட்டது. இது துன்பத்திலிருக்கும் மக்களுக்கு கூடுதல் வலியைத் தருவதாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'வங்கியில் கடன் வாங்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கவில்லை!'