தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

2021க்குள் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கத் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு - ஸ்பைஸ் ஜெட் சி.இ.ஓ சஞ்சய் சிங்

ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனத்தை 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முனைப்புக் காட்டியுள்ளது.

Air India
Air India

By

Published : Jun 22, 2021, 6:24 AM IST

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் திட்டம் நீண்ட நாள்களாகவே முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஆகி வருகிறது.

நடப்பாண்டுக்குள் விற்பனை

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைப்புக் காட்டிவருகிறது.

டாடா குழுமம், ஸ்பைஸ் ஜெட் நிறுவன தலைமை செயல் அலுவலர்(சி.இ.ஓ.) சஞ்சய் சிங் ஆகிய இருவரும்தான் தற்போது ஏலத்தில் உள்ளார்கள்.

விற்பனை ஒப்பந்தம் சார்ந்து சில வேறுபாடுகள் நிலவிவருவதால், இந்த நடவடிக்கை இறுதிக் கட்டத்தில் தற்போது முடங்கியிருப்பதாகவும், வரும் செப்டம்பருக்குள் இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு எட்டுப்படும் என ஒன்றிய அமைச்சக வட்டாரங்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளன.

2020ஆம் ஆண்டு ஜனவரி நிலவரப்படி, ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன்தொகை ரூ.60,074 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் இந்தக் கடன் தொகையில் ரூ.23,286 கோடியை சுமையாக ஏற்கவேண்டும் என அரசின் ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சியோமி மி 11 லைட்: அழகான, ஸ்டைலான, க்யூட்டான ஸ்மார்ட்போன்!

ABOUT THE AUTHOR

...view details