தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஏற்றுமதியாளர்கள் ரீஃபண்ட் பெறுவதை எளிமையாக்கும் அறிவிப்பு - ஏற்றுமதியாளர்கள் ரீஃபண்ட்

கரோனா தொற்றால் ஏற்றுமதி, இறக்குமதி வணிகங்கள் முடங்கிப்போயுள்ள நிலையில், எஸ்.பி. 005 பிழையால் ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு உதவும்வகையில் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜி எஸ் டி
ஜி எஸ் டி

By

Published : Apr 23, 2020, 9:45 AM IST

கப்பல் ரசீது எண், சரக்கு மற்றும் சேவை வரி விவர அறிக்கையின் ரசீது எண் ஆகியவை பொருந்திப்போகாத பட்சத்தில், ஏற்றுமதியாளர்கள் சரக்கு மற்றும் சேவை வரி ரீஃபண்டுகளைப் பெற மாற்று வழிமுறை வசதியை அரசு அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அதற்கான கால வரம்பை நீட்டித்து அறிவித்துள்ளது.

இதில் எஸ்.பி. 005 என்னும் பிழையானது கப்பல் ரசீது, ஜிஎஸ்டி ஆர் ரசீது எண்கள் பொருந்திப்போகாத நிலையில் ஏற்படும் பிழையாகும், இந்தப் பிழையால் பணத்தை திரும்பப் பெறுவதில் ஏற்றுமதியாளர்களுக்கு சிக்கல் ஏற்படும்.

கரோனா தொற்றால் உலகம் முழுவதும் வணிகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது 2019, டிசம்பர் 31ஆம் தேதிக்குள்பட்ட ரசீதுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மாற்று வழிமுறைகளுக்கான காலவரம்பை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:காப்பீட்டு நிறுவனங்கள் ப்ரீமியங்களை தவணைகளில் பெற்றுக்கொள்ளலாம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details