நாட்டின் முன்னணி வர்த்தக அமைப்பான அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் குமார் கந்தேவேல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக புகார் அளித்தார்.
இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் செயல்பாடுகளை உடனடியாக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அந்நிறுவனம் தனது நியாமற்ற விலை, தள்ளுபடி ஆகியவை மூலம் இந்திய சிறு குறு நிறுவனங்களை கபளீகரம் செய்கிறது. எனவே அரசு தனது அந்நிய நேரடி முதலீடு கொள்கையை மாற்றியமைத்து, அமேசான் வர்த்தக செயல்பாடுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.