இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவரும் வீர மரணமடைந்தார்.
இரு நாடுகளுக்குமிடையே மோதல் போக்கு நிலவிவரும் இந்தச் சூழலில் வர்த்தக ரீதியாகச் சீனாவைப் புறக்கணிக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போதைய சூழலில் 500-க்கும் மேற்பட்ட பிரிவுகளின்கீழ் உள்ள மூன்றாயிரம் பொருள்களை உற்பத்திச் செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது. ஆனால் மலிவாகக் கிடைக்கிறதே என்ற ஆசையில் அதை நாம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்துவருகிறோம்.