தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பேட்டரி உற்பத்தி துறைக்கு ரூ.18 ஆயிரம்  கோடி ஒதுக்கீடு - மத்திய அமைச்சரவை

மேம்படுத்தப்பட்ட வேதியல் பாட்டரி செல் உற்பத்தி திட்டத்திற்கு ரூ.18,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.

By

Published : May 13, 2021, 7:29 AM IST

மத்திய அமைச்சரவை
மத்திய அமைச்சரவை

தலைநகர் டெல்லியில் மத்திய அமைசரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டதிற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உற்பத்திசார் திட்டத்திற்கான நிதி ஒதுக்கிடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட வேதியல் பேட்டரி செல் உற்பத்தி திட்டத்திற்கு ரூ.18,000 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.45,000 கோடி அளவிற்கான உள்நாடு, வெளிநாடு முதலீடு வருவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை இது ஊக்கப்படுத்தும் எனத் தெரிவித்த அமைச்சர், சோலார் மின்சக்தி உற்பத்திக்கும் இது உதவும் எனக் கூறினார்.

2021-22ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 13 துறைகளில் ரூ.1.97 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி சார் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க:மனைவியின் இறுதிச் சடங்கிற்காக 130 கி.மீ., தூரம் சைக்கிள் பயணம் செய்த பெரியவர்

ABOUT THE AUTHOR

...view details