தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரிசர்வ் வங்கிக்கு புதிய துணை ஆளுநர் நியமனம் - ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி

ரிசர்வ் வங்கிக்கு புதிய துணை ஆளுநராக ரபி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

T Rabi Sankar
T Rabi Sankar

By

Published : May 2, 2021, 11:12 AM IST

மத்திய அமைச்சரவை நியமனக்குழு சார்பில் ரிசர்வ் வங்கி நியமனம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது துணை ஆளுநராக இருக்கும் பி.பி. கனுங்கோவின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, ரபி சங்கர் புதிய துணை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார். ரிசர்வ் வங்கியின் இணை இயக்குநர் பொறுப்பிலிருந்த இவருக்குப் பதவி உயர்வுடன் கூடிய புதிய பொறுப்பு கிடைத்துள்ளது.

இவரின் பதவிக்காலம் மூன்றாண்டு காலம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Election Results Live Updates: ஓபிஎஸ் பின்னடைவு

ABOUT THE AUTHOR

...view details