இந்திய வர்த்தகச் செய்தியாளர்கள் கூட்டமைப்பு அண்மையில் வெபினார் மூலம் கலந்துரையாடல் மேற்கொண்டது. அதில் நாடு முழுவதும் கரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கல் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை வங்கிகள் மட்டுமல்லாமல் வங்கிகளுக்கு முகவரியாக விளங்கும் வர்த்தகப் பிரிவு செய்தியாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த வருவாய் மட்டுமே ஈட்டும் இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு மாதம் ரூ. 5,000 நிதி உதவி வழங்க வேண்டும்.