தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பங்குச்சந்தையில் களமிறங்கிய பர்கர் கிங்... ரூ.810 கோடி முதலீட்டை ஈர்க்க முடிவு!

டெல்லி: பர்கர் கிங் இந்தியா, பங்குச்சந்தையில் தனது பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 810 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க உள்ளது.

By

Published : Dec 11, 2020, 7:22 PM IST

பர்கர்
பர்கர்

அமெரிக்கா மற்றும் உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் பர்கர் கிங் நிறுவனம் இந்தியாவில் தனது வரத்தகத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் ஐபிஓ வெளியிட முடிவு செய்தது. இந்த திட்டம் டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே அதிகப்படியான பங்குதாரர்கள் வாங்க குவிந்தனர். அந்த பங்குகளின் மதிப்பு சுமார் 59 முதல் 60 ரூபாய் வரை இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 810 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க பர்கர் கிங் திட்டமிட்டிருந்தது. பர்கர் கிங்கின் பங்குகள் வரும் காலத்தில் அதிகரிக்கும் என பங்குதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது, பர்கர் கிங் பங்குகள் மும்பை பங்கு சந்தையிலும், தேசிய பங்குச்சந்தையிலும் பட்டியிலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details