டெல்லி : ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் நிகழ்வுக்கு முன்னதாக, அலுவலகத்தில் அடைப்பட்டு பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அல்வா கிண்டி சுடச் சுட வழங்கப்படும். இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக அல்வாவுக்கு பதிலாக இனிப்புகள் வழங்கப்படுகின்றன.
தொடர்ந்து, 2022-23ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
Union Budget App
இந்தாண்டு பட்ஜெட்டை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள Union Budget App-இல் கண்டுகளிக்கலாம். இந்த மொபைல் செயலியில் 2022-23ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கை குறித்த தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படும்.
இந்த செயலியை தேசிய தகவல், மின்னணு மற்றும் தொடர்பு மையம் உருவாக்கியுள்ளது. இந்த மொபைல் செயலியில் பட்ஜெட் தொடர்பான முழுமையான கருத்துகள், உரைகள், ஆண்டு அறிக்கை, கோரிக்கைகள், நிதி மசோதாக்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.