மின்வாகனங்கள் சேவை
உலகம் முழுவதும் மின் வாகனங்கள் அல்லது புகை உமிழா வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு முக்கியக் காரணமே எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகள்தான். ஆகையால், விரைவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை வீழ்த்தி மின்வாகனங்களின் சேவை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தற்போதே நிரூபிக்கின்ற வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் கூர்மையான பார்வையை மின் வாகன உற்பத்தியின் பக்கம் திருப்பியுள்ளன. அதன்படி 2019ஆம் ஆண்டு மின் வாகன உற்பத்தியில் அதனைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன.
இனி இந்தியாவும் சீனாவும்தான்
ஊக்கமளிக்கும்விதமாக மின் வாகனங்களின் விற்பனை உயர்ந்திருப்பதால் 2020ஆம் ஆண்டு இதனை விரிவுபடுத்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
மோர்கன் ஸ்டான்லி என்ற நிறுவனம், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவும், சீனாவும் மின் வாகன பயன்பாட்டில் உலகை வழிநடத்தும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கலாகும் மத்திய நிதிநிலை அறிக்கையில் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் அளவிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.