இது குறித்து பிஎஸ்என்எல் தலைவர், நிர்வாக இயக்குநர் புர்வார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தற்போது எதிர்கொண்டுள்ள இக்கட்டான ஊரடங்கு காலத்தில், மனிதாபிமான அடிப்படையில், பிஎஸ்என்எல் தனது வேலிடிட்டி காலம் நிறைவடைந்த மொபைல் வாடிக்கையாளர்களும், கணக்கில் உள்ள தொகை முழுவதும் தீர்ந்துவிட்ட வாடிக்கையாளர்களும் பயனுறும்விதமாக, அவர்களின் மொபைல் வேலிடிட்டி காலத்தை மே மாதம் 5ஆம் தேதிவரை இலவசமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் இன்கமிங் வசதியைத் தொடர்ந்து பெறலாம். மேலும், நடைமுறையில் இருந்துவரும் டிஜிட்டல் ரீ-சார்ஜ் முறைகளைக் கையாள முடியாத வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்விதமாக பிஎஸ்என்எல் ரீ-சார்ஜ் அழைப்புதவி இலவச தொலைபேசி எண் 5670099-ஐ அறிமுகம் செய்துள்ளது.
‘கர் பைட்டே ரீ-சார்ஜ்’ வீட்டிலிருந்தே ரீ-சார்ஜ் செய்தல், ‘அப்னோ கி மதத் சே ரீ-சார்ஜ்’ நம்மைச் சார்ந்தவர்கள் உதவியுடன் ரீ-சார்ஜ் செய்தல் வசதிகளுடன் இச்சேவை வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு, மேற்கு மண்டலங்களில் அறிமுகம்செய்யப்பட்டுள்ள இந்தச் சேவை 22ஆம் தேதிமுதல் தெற்கு, கிழக்கு மண்டலங்களிலும் வழங்கப்பட உள்ளது. வீட்டிலிருந்தே ரீ-சார்ஜ் செய்யும் வசதியின்மூலம் வாடிக்கையாளர் தனது ரீ-சார்ஜ் வேண்டுகோளை தெரிவித்தால், பிஎஸ்என்எல் அலுவலர் வீட்டிற்கே வந்து ரீ-சார்ஜ் செய்துகொடுப்பார்.