2020-21ஆம் நிதியாண்டில் மத்திய அரசு தனக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை விற்று, சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி மத்திய அரசு, தனது ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை விற்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மேலும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சுமார் 47,430 கோடி ரூபாய் மதிப்பிலான 52.29 விழுக்காடு பங்குகள் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைப் பிரிவு, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.