நவம்பர் மாத காலகட்டத்தின் வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கோவிட்-19 காரணமாக முடங்கியிருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போதைய பண்டிகைக் காலத்தில் மீண்டும் எழுச்சிபெறத் தொடங்கியுள்ளது.
நவராத்திரி, தீபாவளி என கடந்த நவம்பர் மாதத்தில் வந்த பண்டிகைகளை அடுத்து, வாகன விற்பனையும் சிறப்பான ஏற்றத்தைக் கண்டுள்ளது. நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், நவம்பர் மாத காலத்தில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 223 வாகனங்களை விற்றுள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 1.7 விழுக்காடு அதிகமாகும்.