தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பிஎம்டபிள்யூ கார்களை ஆன்லைனில் பதிவு செய்து சர்வீஸ் செய்யலாம்!! - ஆன்லைன் கார் சர்வீஸ்

டெல்லி: பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய முயற்சியாக ஆன்லைனில் முன்பதிவு செய்து கார் சர்வீஸ் செய்து வீட்டில் டெலிவிரி கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

BMW India initiates service campaign amid coronavirus pandemic  service campaign amid coronavirus pandemic  coronavirus pandemic  BMW  business news  பிஎம்டபிள்யூ  கரோனா வைரஸ்  பிஎம்டபிள்யூ கார் சர்வீஸ் ஆன்லைன்  ஆன்லைன் கார் சர்வீஸ்  கார் சர்வீஸ்
BMW India initiates service campaign amid coronavirus pandemic

By

Published : May 14, 2020, 4:46 PM IST

இது குறித்து பிஎம்டபிள்யூ குழுமத்தின் இந்தியாவின் செயல் தலைவர் அர்லிண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த புதிய முயற்சியின் கீழ், வாடிக்கையாளர்கள் வாகன விற்பனைக்குப் பின் விரிவான சேவைகளைப் பெறமுடியும். இதனால், அனைத்து நேரங்களிலும் வாகனங்களின் மின் செயல்பாடு, சாலைக்குத் தயாராக இருப்பதை உறுதிசெய்ய முடியும்.

பிஎம்டபிள்யூ விரிவாக்கப்பட்ட சர்வீஸ் சேவை எல்லா நேரங்களிலும் அனைத்து வகையான வாகன பாதுகாப்பையும் வாடிக்கையாளர்களின் கார்களின் மொத்த தயார் நிலையையும் உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 33 சர்வீஸ் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கார் சர்வீஸ் செய்யப்பட்டு சுத்தகரித்து எங்கள் வாடிக்கையாளர் சேவை அலுவலர் உங்கள் வீட்டிற்கே காரை டெலிவிரி கொடுப்பார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பிஎம்டபிள்யூ காரை திருடி கொலைக்குப் பயன்படுத்திய பிரபல திருடன் போலீசில் சிக்கினான்!

ABOUT THE AUTHOR

...view details