தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ப்ளாக் ஃப்ரை டே (Black Friday)...! என்றால் என்ன? - அமேசாம்

ப்ளாக் ஃப்ரை டே அன்று ஏன் விற்பனையாளர்கள் தங்களது பொருள்களை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர் என்ற காரணத்தை இங்கே பார்க்கலாம்.

black-friday-2020-falls-on-november-27
black-friday-2020-falls-on-november-27

By

Published : Nov 25, 2020, 6:04 AM IST

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் நிதியாளர்களான ஜேய் கோட், ஜிம் பிஸ்ட் ஆகியோர் சேர்ந்து நாட்டின் அதிகமான தங்கங்களை வாங்கி, ஸ்டாக் மார்க்கெட்டை வீழ்ச்சியடைய செய்தனர். இதனால் அமெரிக்காவின் வங்கிகள் திவாலானதால், விவசாயிகள்வரை பாதிப்புளை உணர்ந்தனர். அப்போது அமெரிக்க அரசுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிகழ்வு செப்.24 (வெள்ளிக் கிழமை) 1869 அன்று நடந்தது. அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாட்டத்திற்கு பின், இந்த ப்ளாக் ஃப்ரை டே வரும்.

நவ.27 அன்று ப்ளாக் ஃப்ரை டே

ஆனால் இப்போது ஷாப்பிங் செய்வதற்கான நாளாக மாறியுள்ளது. இந்த ப்ளாக் ஃப்ரை டே நாளின்போது விற்பனையாளர்கள் ஏராளமான தள்ளுபடிளை அறிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த ப்ளாக் ஃப்ரை டே பற்றி மற்றொரு சம்பவம் கூறப்படுகிறது. அந்த நாளின்போது தெற்கு பகுதியைச் சேர்ந்த நிலம் வைத்திருப்பவர்கள், தள்ளுபடியில் அடிமைகளை வாங்கும் நாளாகவும் கூறப்படுகிறது.

நவ.27 அன்று ப்ளாக் ஃப்ரை டே

ஆனால் ப்ளாக் ஃப்ரை டேவுக்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் வேறு. 1950களில் சனிக்கிழமையன்று நடைபெறும் ராணுவம்-கடற்படை இடையே நடக்கும் கால்பந்து விளையாட்டுக்கு முன்னதாக புறநகர் கடைக்காரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நகரத்திற்குள் வெள்ளம்போல் புகுந்தபோது, நன்றி தெரிவித்த நாளின் கொண்டாட்டத்திற்கு மறுநாள் ஏற்பட்ட குழப்பத்தை விவரிக்க பிலடெல்பியா நகரில் உள்ள காவல் துறையினர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினர்.

இந்த ஆண்டுக்கான ப்ளாக் ஃப்ரை டே நவ.27ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அமெரிக்காவில் உள்ள பல விற்பனையாளர்கள் தள்ளுபடி விலையில் பொருள்களை விற்பனை செய்வார்கள். இந்தியாவில் உள்ள மக்கள் ஏதேனும் எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தால், இந்த ப்ளாக் ஃப்ரை டே விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிங்க:உலகின் ஆடம்பரமான குடியிருப்பு நகரம் எது எனத் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details