மும்பையில் தொழில் துறை சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற மத்திய போக்குவரத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாற்று எரிவாயு குறித்துப் பேசினார்.
அப்போது, "இந்தியாவின் வாகன எரிவாயு தேவை கச்சா எண்ணெய் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. ஆண்டொன்றுக்குச் சராசரியாக சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய் கச்சா எண்ணெய் இறக்குமதிக்குச் செலவிடப்படுகிறது. குறிப்பாக விமான போக்குவரத்துக்கு கச்சா எண்ணெய்த் தேவை அதிகரித்துவருகிறது" என்றார்.
அதேவேளையில், மாற்று எரிவாயுவுக்கான வாய்ப்புகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதாகக் கூறிய கட்கரி, எத்தனால், ப்யூட்டனால் போன்ற எரிபொருட்களை கார்கள் விமான போக்குவரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.