ஆறாம் கட்ட ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்திற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அளித்தது. 2,251.25 மெகாஹெர்ட்ஸ் அளவு அலைக்கற்றைக்கு சுமார் ரூ.3.92 லட்சம் கோடி அடிப்படை மதிப்பாக வைத்து ஏலம் நடத்தப்படவுள்ளது.
இந்த ஏலத்திற்கான ஆலோசனை கருத்தரங்கு ஜனவரி 12ஆம் தேதியும், அறிக்கைத் தொடர்பான சந்தேகங்கள் விளக்கத்திற்கான கடைசிநாள் ஜனவரி 28ஆம் தேதியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.