மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள பாரத் பாண்ட் இ.டி.எஃப் நாளை செயலுக்கு வரவுள்ளது. பாரத் பாண்ட் இ.டி.எஃப் (Bharat Bond ETF) என்பது பல மத்திய அரசு நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய ஒரு பங்காகும்.
பொதுவாக, பங்குச் சந்தையில் நாம் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்போம். ஆனால், இந்த வகை பாண்ட்களில் பல அரசு நிறுவனங்களின் பங்குகள் பரவலாக்கப்பட்டு, ஒற்றைப் பங்குகளாக மாற்றப்படுகிறது. இதனை 'பாண்ட்' என்று அழைக்கிறார்கள்.