தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 1, 2020, 5:03 PM IST

ETV Bharat / business

கோவிட் - 19 காலத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வழிமுறைகள் - ஒருபார்வை

கடினமான கரோனா காலங்களில் வேலை இழப்பு, ஊதியக் குறைப்பு, சரியான நேரத்தில் சம்பளம் வராதது போன்ற நேரத்தில் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது என்பது அனைவருக்கும் எளிதான விருப்பமாக மாறியுள்ளது. ஆனால் இந்த நேரங்கள்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்தி அதிகமாக செலவழிப்பதில் ஈடுபடக்கூடாது. ஏனென்றால் அது ஒருவரைப் கடினமான நிதி சிக்கலில் சிக்க வைத்து அதிலிருந்து மீள முடியாமல் செய்து விடலாம். அதற்கான சிறந்த உதவிக்குறிப்புகளைப் தனிநபர் நிதி நிபுணர் விரால் பட் தந்திருக்கிறார்.

Best credit card tips to avoid debt trap in COVID times credit card tips to avoid debt trap avoid debt trap in COVID times credit card business news Viral Bhatt
Best credit card tips to avoid debt trap in COVID times credit card tips to avoid debt trap avoid debt trap in COVID times credit card business news Viral Bhatt

கிரெடிட் கார்டு பிரபலமான பணம் செலுத்தும் முறை என்றாலும், கோவிட்-19 காலங்களில் அதைப் பயன்படுத்துவது ஆபத்தான விவகாரம். கவனமாகப் பயன்படுத்தாவிட்டால் கடன் என்ற வலையில் அது உங்களைத் தள்ளக்கூடும்.

இந்த சிக்கலான நேரத்தில், ஆரோக்கியமான நிதி நிலையில் நீங்கள் இருக்க உதவும் சில முக்கியமான கிரெடிட் கார்டு பயன்பாட்டு உதவிக்குறிப்புகளை கீழே படிக்கவும். உங்கள் அனைத்து கிரெடிட் கார்டு கடனையும் ஒருங்கிணைக்கவும்.

இந்த நிலையற்ற காலங்களில் சிறந்த வழி உங்கள் கிரெடிட் கார்டு கடனை ஒருங்கிணைப்பதாகும். உங்களிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால், பெரும்பாலான கடன் வழங்குநர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் உங்களுக்கு தனிநபர் கடனை வழங்குவதற்கு தயாராக இருப்பார்கள்.

நீங்கள் தற்காலிக கடன் தவணை தடையை விதிக்கவில்லை என்றாலோ உங்கள் வருமானத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கடன் இருந்தாலோ, நீங்கள் தனிநபர் கடனை எளிதாக பெறலாம்.

மேலும், உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாகவும், உங்களிடம் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் பதிவு இருந்தால் மற்றொரு கிரெடிட் கார்டில் உங்களது கடனை ஒருங்கிணைப்பற்கு வங்கிகளும் தயாராக இருக்கும்.

‘மாதாந்திர தவணை’ –க்கு மாற்ற வேண்டாம்

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் பெரிய கொள்முதல் செய்தவுடன், உடனடியாக ‘மாதாந்திர தவணை’ திட்டத்திற்கு மாறுவது’ என்பதைத் தேர்வு செய்ய வங்கிகளிடமிருந்து அழைப்புகளைப் பெறத் தொடங்குவீர்கள். அதன் மூலம் நீங்கள் விரைவாக ஈர்க்கப்படலாம், ஆனால் அவ்வாறு செய்ய வேண்டாம். இந்த விருப்பம், செயலாக்க கட்டணம் மற்றும் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளது.

மேலும், நீங்கள் மாதாந்திர தவணை’ கட்டணம் செலுத்தாத காலம் வரை உங்கள் கிரெடிட் கார்டு வரம்பு தடுக்கப்படும். அதற்கு பதிலாக உண்மையான கடன் மதிப்பை விட அதிகமாக செலுத்துவீர்கள்.

ஒவ்வொரு மாதமும் உங்கள் கிரெடிட் கார்டு பில்லை சரிபார்க்கவும்இது நீங்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான நடைமுறை. உங்களுக்கு ஏதாவது கூடுதலாக கட்டணம் அதாவது மறைமுக கட்டணங்கள், செயலாக்க கட்டணம், காப்பீட்டு பிரீமியங்கள் போன்றவை வசூலிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய அதைச் சரிபார்க்கவும்.

இதுபோன்ற ஏதேனும் ஒரு கட்டணத்தை நீங்கள் கண்டால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு, உங்களிடமிருந்து எந்த அங்கீகாரமும் இல்லாமல் எந்தவொரு கட்டணத்தையும் பற்று வைக்க வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

‘இப்போது வாங்கலாம், பின்னர் செலுத்தலாம்’ என்ற மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள் எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதற்கு உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டாம். கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது மக்கள் அதிக செலவு செய்வார்கள் என்பது உலகளாவிய உண்மை.

இப்போது வாங்கலாம், பின்னர் செலுத்தலாம் என்ற எண்ணம் எந்தவொரு வாடிக்கையாளரையும் கூடுதலாக பொருட்களை வாங்கத் தூண்டுகிறது. இப்போது, ​​மளிகை பொருட்களை வாங்குவதைத் தவிர கேஜெட்டுகள், உடைகள் அல்லது எந்த ஆபரணங்களையும் வாங்குவதற்கு கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்ய வேண்டாம்.

இந்த கடினமான காலங்கள் நீண்ட காலம் நீடிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் உங்கள் நிறுவனம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கவில்லை. எனவே, உங்கள் வருமான ஆதாரத்தை அதிகம் நம்பாமல் எளிதாக திருப்பிச் செலுத்தக் கூடிவைகளுக்கு மட்டுமே செலவிடுங்கள்.

தற்காலிக கடன் தவணை தடை உங்களுக்கு அதிகம் பயனளிக்காது

முதலில் ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு செலுத்துதல்களுக்கு ஒரு தற்காலிக கடன் தவணை தடையை வழங்கியது, ஆனால் அதிகரித்து வரும் நோய் தாக்கத்தின் அடிப்படையில், அந்த தற்காலிக தடை மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக கடன் தவணை தடையை தேர்வு செய்வது உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகம் பாதிக்காது, ஆனால் ஊரடங்கிற்கு பின் நிலுவைத்தொகை மற்றும் வட்டி கட்டணங்களை அதிக அளவு சுமக்க வேண்டியது இருக்கும்.

தற்காலிக கடன் தவணை தடைக்காலத்தில் நீங்கள் செய்யும் கொள்முதல்களுக்கு, வாங்கிய நாளிலிருந்து வட்டி குவியத் தொடங்கும் என்பதை நினைவில் கொள்க. எனவே, உங்கள் கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையை நீங்கள் எளிதாக செலுத்த முடிந்தால், நீங்கள் கையாள மற்ற அவசர செலவுகள் இல்லாவிட்டால், தற்காலிக கடன் தவணை தடையைத் தேர்வுசெய்ய வேண்டாம்.

உங்கள் கிரெடிட் கார்டை தொலைத்து விடாதீர்கள்

தொலைந்த உங்கள் கிரெடிட் கார்டை எளிதில் மாற்ற முடியாது என்பதால் இந்த கடினமான காலங்களில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வங்கிகள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படுகின்றன, மேலும் அட்டையை இழப்பது என்பது பாதுகாப்பு தாக்கங்களைக் கொண்டுள்ளது. எனவே உங்கள் அட்டையை அதிக கவனத்துடன் கையாளவும். வெகுமதி புள்ளிகளைப் பயன்படுத்தவும்.

பொதுவாக வெகுமதி புள்ளிகளுக்கு பதிலாக வங்கிகள் உங்களுக்கு கூப்பன்கள் மற்றும் தள்ளுபடியை வழங்குகின்றன. உங்கள் வங்கியின் இணைய வங்கி வலைத்தளம் மூலம் உங்கள் வெகுமதி புள்ளிகளை எளிதாக சரிபார்க்கலாம். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு நீங்கள் வெகுமதி புள்ளிகளைப் பயன்படுத்தலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள உதவிக்குறிப்புகள் உங்கள் நிதி நலன்களை பின்பற்ற எளிதானது. நீங்கள் அவற்றை பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் மோசமான நிதி நிர்வாகம் உங்கள் எதிர்கால நிதிகளை ஒருபோதும் பாதிக்கக் கூடாது.

குறிப்பு: இந்தக் கட்டுரை கட்டுரையில் உள்ள கருத்துகள் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகள். இந்த கருத்துக்கும் ஈடிவி பாரத் நிர்வாகத்திற்கும் எந்த பொறுப்பும் அல்ல.

ABOUT THE AUTHOR

...view details