தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஸ்டாக் ஓவர்ஃப்ளோ தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட இந்தியர்! - தமிழ் வர்த்தக செய்திகள்

பெங்களூரு: குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த ஸ்டாக் ஓவர்ஃப்ளோ இணையதளம் அதன் புதிய தலைமை அதிகாரியாக பெங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் சந்திரசேகர் என்பவரை நியமித்துள்ளது.

city user engaged in stack overflow

By

Published : Sep 29, 2019, 10:18 AM IST

Updated : Sep 29, 2019, 11:53 AM IST

ஸ்டாக் ஓவர்ஃப்ளோ(Stack Overflow) இணையதளத்தை ஜெப் அட்வுட் (Jeff Atwood), ஜோயல் ஸ்பால்ஸ்கேய் (Joel Spolsky) என்பவர்கள் 2008ஆம் ஆண்டு தொடங்கினர். நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த இணையதளம், வினா விடை வடிவில் அமைக்கப்பட்டுகணினி ப்ரோக்ராமர்ஸுக்காக (Computer Programmers) பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் (Programming Language) சம்மந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் இங்கு பதில் கிடைக்கும்.

குறிப்பாக வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்க ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷியன், போர்ச்சுக்கீஷ், ஜப்பானீஷ் ஆகிய மொழிகளில் இந்த ஸ்டாக் ஓவர்ஃப்ளோ இணையதளம் இயங்கிவருகிறது.

city user engaged in stack overflow

இந்நிலையில் ஸ்டாக் ஓவர்ப்ளோவின் புதிய தலைமை அதிகாரியாக பெங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். மாதத்திற்கு 5 கோடி வாடிக்கையாளர்கள் இணையும் இந்த இணையதளத்தில் பெங்களூருவில் இருந்து தான் அதிகம் வாடிக்கையாளர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். மேலும் லண்டன், பெங்களூரு, சென்னை, மும்பை, மாஸ்கோ,பாரிஸ், நியூ யார்க், புனே, ஹைதராபாத் போன்ற இடங்களிலும், இந்த இணையதளம் தனி இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது தலைமை அதிகாரியாக செயல்பட்டு வரும் ஜோயல் ஸ்பால்ஸ்கேய், இனி தலைவராக செயல்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சரிவை சந்தித்து வரும் இந்தியாபுல்ஸ் குழுமம்!

Last Updated : Sep 29, 2019, 11:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details