டெல்லி: நாடு முழுவதும் வங்கிகளுக்கு இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் முழு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்படி இந்தாண்டு அக்டோபர் 9, 23 ஆகிய இரண்டு நாள்களும் முழு விடுமுறை ஆகும். அக்டோபர் 2 சனிக்கிழமையன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை. அக்டோபர் 3, 10, 17, 24, 31 ஆகிய ஐந்து நாள்களும் ஞாயிற்றுக்கிழமை.
இது தவிர அக்டோபர் 14, 15இல் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை. அக்டோபர் 19இல் மிலாடி நபி விடுமுறை. மேற்கண்ட 11 நாள்களும் நாடு முழுவதும் வங்கிகளுக்கு முழு விடுமுறை. மேலும், 10 நாள்கள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
- அக்டோபர் 1 அரையாண்டு கணக்கு முடிவு - சிக்கிம்
- அக்டோபர் 6 மஹாளய அமாவாசை - திரிபுரா, கர்நாடகா, மேற்கு வங்கம்
- அக்டோபர் 7 மேரா சவுரென் ஹவுபா லெய்னினங்தோ சனமஹி - மணிப்பூர்
- அக்டோபர் 12 மஹா சப்தமி - திரிபுரா, கர்நாடகா
- அக்டோபர் 13 மஹா அஷ்டமி - திரிபுரா, ஒடிசா, சிக்கிம், அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், பிகார், ஜார்கண்ட்.
- அக்டோபர் 16 துர்கா பூஜை - சிக்கிம்
- அக்டோபர் 18 கதி பிஹு - அஸ்ஸாம்
- அக்டோபர் 20 மகரிஷி வால்மிகி ஜெயந்தி - திரிபுரா, கர்நாடகா, சண்டிகர், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம்
- அக்டோபர் 22 மிலாடி நபியைத் தொடர்ந்துவரும் வெள்ளி - ஜம்மு - காஷ்மீர்
- அக்டோபர் 26 அக்செஷன் டே - ஜம்மு காஷ்மீர்
இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:ஷாக் கொடுத்த சீனா - மெய்நிகர் பண வர்த்தகத்திற்குத் தடை