தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு: 5ஆம் தேதி கூடுகிறது ஊழியர் சங்கம்

டெல்லி: பொதுத்துறை வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வரும் 5ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.

Protest

By

Published : Sep 3, 2019, 6:38 PM IST

ஓரியன்டல் வங்கி, யுனைட்டெட் வங்கிகளை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சின்டிகேட் வங்கியை கேனரா வங்கியுடனும், ஆந்திரா, கார்பரேஷன் வங்கியை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடனும், இந்தியன் வங்கியை அலகாபாத் வங்கியுடன் இணைப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இந்த இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த இணைப்பு தனியார் வங்கிகளை ஊக்குவிப்பதாகவும், பொதுத்துறை வங்கியில் பணி வாய்ப்புகளைக் குறைப்பதாகவும் ஊழியர்கள் சார்பில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வங்கி இணைப்பை எதிர்த்து வரும் 5ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து வரும் 11ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details