சர்வதேச அளவில் முக்கிய ரேட்டிங்நிறுவனமான மூடிஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளர்ந்துவரும் ஆசியாவில் வங்கி மூலதனம் வீழ்ச்சியடையும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து மூடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை சவாலாக இருப்பதால், வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் வங்கிகளின் மூலதனம் நிச்சயமற்ற போக்கில் உள்ளது. வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு 2021ஆம் ஆண்டு எதிர்மறையாகவே இருக்கும்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கிறது. இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளர்ந்துவரும் ஆசியாவில் வங்கி மூலதனம் வீழ்ச்சியடையும். குறிப்பாக, இந்தியா, இலங்கையில் உள்ள வங்கிகளில் அரசு, தனியார் முதலீடு இல்லாததால் பெரியளவில் மூலதனத்தில் சரிவு ஏற்படும்.