அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான CAIT மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், சிறு வணிகம் பாதிக்காமல் இருக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
CAIT அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சலுகை என்ற பெயரில் சிறுவணிகர்களின் வாழ்வாதாரத்தை காலி செய்யும் விதத்தில் செயல்பட்டுவருகின்றன. இதற்கு உடந்தையாக வங்கிகளும் இருப்பதுதான் வருந்தத்தக்கதாக உள்ளது.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனம் பல்வேறு வங்கிகளுடன் கூட்டு வைத்து 10 விழுக்காடு கேஷ்பேக் சலுகை வழங்கிவருவது சாதாரண சிறு வணிகர்களின் வியாபாரத்தை பாதிக்கிறது.
இதுபோன்று ஆன்லைன் நிறுவனங்களுடன் இதுபோன்ற மோசமான கூட்டணி வைத்து வங்கிகள் வியாபாரிகளுக்கு வில்லன்களாக உள்ளன என குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே நாட்டின் உள்ள வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இவ்விவகாரத்தில் மத்திய நிதியமைச்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
இதையும் படிங்க:சோஜிலா பாஸ் பனிச்சரிவில் சிக்கிய 5 பயணிகள் மீட்பு!