நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப் மூலம் வங்கிச் சேவை என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கு இருப்பு நிலவரம், மினி ஸ்டேட்மென்ட், காசோலை நிலவரம், காசோலைப் புத்தகம், டெபிட் அட்டையை பிளாக் செய்தல் உள்ளிட்ட பல சேவைகளை வாட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளது.
இதற்காக தனியே எந்த அப்ளிகேஷனும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை எனவும், வங்கியின் சேவை குறித்த விவரங்களை வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இந்தச் சேவை மூலம் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் ஏ.கே. குரானா பேசுகையில், தற்போதைய காலத்தில் சமூக வலைதளத்தின் தாக்கம் அதிகரித்துவருகிறது. எனவே, இந்த வாட்ஸ்அப் பேங்கிங் நிச்சயமாக வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:48 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்