தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

2020 நிதியாண்டில் ரூ.1.86 லட்சம் கோடி வங்கி மோசடி - ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்

2019-20ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1.86 லட்சம் கோடி ரூபாய் வங்கி மோசடி நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.

RBI
RBI

By

Published : Aug 27, 2020, 7:23 PM IST

ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த ஓராண்டு காலத்தில் இந்திய வங்கிகளில் ஏற்பட்ட மோசடிகள் குறித்த புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, 2019-20 ஆண்டு காலகட்டத்தில், மொத்தம் 8 ஆயிரத்து 707 மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம், சுமார் 1.86 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 159 விழுக்காடு அதிகமாகும்.

2018-19 காலகட்டத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 799 மோசடி வழக்குகள் பதியப்பட்டு, 71 ஆயிரத்து 543 கோடி ரூபாய் தொகை மோசடி செய்யப்பட்டது.

2019-20 நடைபெற்ற மோசடியில் சுமார் 80 விழுக்காடு பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்றுள்ளது. அதன்படி, பொதுத்துறை வங்கிகள் சுமார் 1.48 லட்சம் கோடி ரூபாயும், தனியார் வங்கிகளில் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாயும் மோசடி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, இணைதளம் மற்றும் கார்டு மூலம் நடைபெறும் மோசடிகள் 44 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது. இந்த வகையில் சுமார் 195 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:15 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தகாரரான அமேசான் ஜெஃப் பெசோஸ்

ABOUT THE AUTHOR

...view details