கடந்த ஏப்ரல் 10ஆம் தேதிவரையிலான இந்திய வங்கிகளின் நிதி நிலவரம் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய வங்கிகளில் வைப்புத் தொகை 9.45 விழுக்காடு உயர்ந்து 137.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வங்கிகளின் கடன் தொகை 7.20 விழுக்காடு உயர்ந்து 103.39 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
நாட்டில் பொருளாதார மந்தநிலை, தேவைக் குறைவு, வங்கிகளின் நிதி நிலைமை ஆகிய அம்சங்கள் காரணமாக கடன் வழங்கும் தொகையானது கடந்த நிதியாண்டில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு (1962ஆம் ஆண்டுக்குப் பின்) வங்கிகள் கடன் வழங்கும் தொகை 6.14 ஆக சரிந்துள்ளது.