நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்டகால சேமிப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர வைப்புநிதித் திட்டத்தில் (Fixed Deposit) புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
அதன்படி இரண்டாண்டுகள் அதற்கும் மேலான காலத்திற்கு நிரந்தர வைப்புநிதி வைத்திருப்பவர்கள், தேவைக்காக 15 மாத காலத்திற்குப் பின் முன்னதாகவே எடுக்கும்பட்சத்தில் அபராதம் இல்லை என அறிவித்துள்ளது. இந்தச் சலுகை தொடர் வைப்புக்கணக்கு (Recurring Deposit) சேமிப்புத் திட்டத்திற்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.