தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வாகன விற்பனை சரிவு: சியாம் அமைப்பு தகவல்

நாட்டின் வாகன விற்பனை தொடர் சரிவை சந்தித்து வருவது பொருளாதார மந்த நிலை நீடித்து வருவதைக் காட்டுவதாக நிபுணர்கள் கலக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

auto

By

Published : Jul 10, 2019, 2:52 PM IST

நாட்டின் வாகன விற்பனை புள்ளிவிவரங்களை மாதம்தோறும் சியாம் (SIAM) என்ற அமைப்பு வெளியிடுவது வழக்கம். அதன்படி, ஜூன் மாத வாகன விற்பனை புள்ளிவிவரம் பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.

சியாம் புள்ளிவிவரத்தின்படி, நாட்டின் பயணிகள் வாகன விற்பனை கடந்த மே மாதத்தை ஒப்பிடும்போது 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதில் பயணிகள் வாகன விற்பனை 17.54 சதவீதம் சரிவையும், கார்கள் விற்பனை 24.97 சதவீதமும், இருசக்கர வாகன விற்பனை 11.69 சதவீதமும், கனரக வாகன விற்பனை 12.27 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.

இந்த புள்ளிவிவரம் அனைத்துவகையான வாகனங்களும் விற்பனையில் பெரும் தேக்கநிலையில் இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த சரிவானது கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாகவே நீடித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாலேயே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கலக்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details