தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

உச்சத்தை நோக்கி தங்கம் விலை - Chennai

இன்றைய (ஆக. 14) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 35,480 அதிகரித்து விற்பனையானது.

உச்சத்தை நோக்கி தங்கம் விலை
உச்சத்தை நோக்கி தங்கம் விலை

By

Published : Aug 14, 2021, 10:11 PM IST

கடந்த இரண்டு நாள்களில் இருந்த தங்கத்தின் விலையை விட தங்கம் தற்போது சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 40 அதிகரித்து ரூ. 4,435 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆக சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து ரூ. 35,480 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 4,799 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ.38,392-க்கு விற்பனையாகிறது.

கடந்த இரண்டு நாளில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 35,160 என இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமிற்கு 90 காசுகள் குறைந்து ரூ. 68.20 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆக கிலோ வெள்ளி ரூ. 900 குறைந்து ரூ. 68,200க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க: 'முதல் காலாண்டில் அமோக லாபம் கண்ட ஓ.என்.ஜி.சி.'

ABOUT THE AUTHOR

...view details