தங்கத்தின் விலை கடந்த மூன்று நாள்களாகச் சரிந்துவரும் நிலையில், பொன் நகை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பெண்கள் நகை வாங்கு ஆர்வம் காட்டிவருகின்றனர். சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.61 குறைந்து நான்காயிரத்து 440 ரூபாயாக விலை நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.
ஆக சவரனுக்கு ரூ.488 குறைந்து 35 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,804 ஆக விலை நிர்ணயம்செய்யப்பட்டு, சவரனுக்கு 38 ஆயிரத்து 432 ரூபாயாக விற்பனையாகிறது.